ரூ.4,500 கோடியில் பக்கிங்காம் மன்னர் அரண்மனை புதுப்பிக்க முடிவு

ரூ.4,500 கோடியில் பக்கிங்காம் மன்னர் அரண்மனை புதுப்பிக்க முடிவு

buckingham-palac600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் பிரிட்டன் மன்னர் குடும்பத்தினர் வாழ்ந்து வரும் பக்கிங்ஹாம் அரண்மனை புதுப்பிக்கப்பட உள்ளதாக பிரிட்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன

கடந்த 1992ம் ஆண்டில், இந்த அரண்மனையில் லேசான தீ விபத்தின் ஏற்பட்டபோது, புதுப்பிக்கப்பட்டது. இதன்பின்னர் 24 வருடங்கள் கழித்து இந்த அரண்மனை மீண்டும் தற்போது புதுப்பிக்கப்படவுள்ளது..

இந்த அரண்மனையின் உள் அறைகள் மற்றும் சுற்றுப்புறச் சுவர்கள், மின்சார கேபிள்கள், குடிநீர், கழிவுநீர்ப் பாதைகள் என அனைத்தையும் செப்பனிட்டு, சீரமைக்க அரண்மனை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வரும் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் இந்த புதுப்பிக்கும் பணி 2027ஆம் ஆண்டு முடியும் என்றும் பத்து ஆண்டுகள் புதுப்பிக்கும் பணி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த மதிப்பில் சுமார் ரூ.4,500 கோடி புதுப்பிக்கும் பணிக்கு செலவிடப்படவுள்ளது.

Leave a Reply