புத்தரின் 2500வது பிறந்த வருடமான 1950ஆம் ஆண்டு, புத்தரின் முடி, பல், எலும்புகள் முதலியவை இலங்கையில் இருந்து கம்போடியாவில் உள்ள மலைக்கோயிலுக்கு தங்கத்தாழி ஒன்றில் வைத்து எடுத்து வரப்பட்டது. மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த இந்த தங்கத்தாழி, கடந்த டிசம்பர் மாதம் திருடு போனது. இதனால் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
புத்தரின் திருடு போன பொருட்களை மீட்க கம்போடியா அரசு, தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது. கம்போடியா போலீஸாரின் தீவிர வேட்டைக்கு பின்னர் நேற்று முன் தினம், உடாங் நகரில் உள்ள ஒரு வீட்டில் மீட்கப்பட்டது. தங்கத்தாழில் உள்ள பொருட்கள் யாவும், பத்திரமாக இருந்ததாகவும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டையில் தங்கத்தாழியை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஆனாலும் இந்த திருட்டுக்கு மூலகாரணமான நபர் தப்பித்துவிட்டார். அவரை தேடும்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.