இந்தியாவில் மத ரீதியிலான மோதல்கள் குறைவு. சென்னையில் தலாய்லாமா பேச்சு
திபெத் நாட்டின் புத்தமத தலைவர் தலாய்லாமா, சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ‘மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மத ரீதியிலான மோதல்கள் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 9ஆம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் லட்சிய இந்தியா இயக்கத்தின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய விருந்தினராக திபெத் நாட்டின் புத்த மத தலைவர் தலாய் லாமா கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐந்து பேர்களுக்கு சேவ ரத்னா விருதுகளை தலாய்லாமா வழங்கினார். மரம் வளர்ப்பு, ஊரணிக்கு உயிர் கொடுப்போம், தூய்மையான குடிநீர் வழங்குவோம், பசுமை கிராம கட்டமைப்பு, மது மறுவாழ்வு பணி ஆகிய 5 தலைப்புகளின் கீழ் ஐந்து பேர் தலாய்லாமாவிடம் விருது பெற்றனர்.
பின்னர் பேசிய தலாய்லாமா, ‘மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மத ரீதியிலான மோதல்கள் குறைவாக இருந்தாலும், 100 சதவிகிதம் அமைதியாக இல்லை. அப்துல் கலாம் கூறியதுபோல், இந்திய இளைஞர்கள் அனைவரும் லட்சியக் கனவு காண வேண்டும் என்று அவர் பேசினார்.