தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கும் திட்டம் வாபஸ். மக்களவையில் அருண் ஜெட்லி அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கும் திட்டம் வாபஸ். மக்களவையில் அருண் ஜெட்லி அறிவிப்பு

arun jaitleyகடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் தொழிலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவை திரும்ப பெறப்போவதாக தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சமீபத்தில் தாக்கல் செய்தமத்திய பட்ஜெட்டில், பிஎப் தொகைக்கு வரி பிடித்தம் செய்வது குறித்து அறிவிக்கப்பட்டது. அதாவது, பணியில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்களது பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுத்தால் அதில் 40 சதவீத தொகைக்கு வரி  விலக்கு அளிக்கப்படும் என்றும் எஞ்சிய 60 சதவீதத்துக்கு வரி பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு எதிர்வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்புக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சற்று பின்வாங்கிய மத்திய அரசு பிஎப் பணத்தை தொழிலாளர்கள் பெறும்போது வரி பிடித்தம் செய்வது குறித்த பிரச்சனைக்கு பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்வு கண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியிருந்தார்.

இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை திரும்ப பெறுவதாக அருண் ஜெட்லி மக்களவையில் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து மக்களவையில் பேசிய அருண் ஜெட்லி, “முக்கியமான விவாதம் என்னவென்றால், எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை தொழிலாளர்கள் விருப்பத்திற்கு விட வேண்டும். பென்ஷன் திட்டங்களில் மக்களை இணைய வைக்க வேண்டும்” என்று கூறினார்.

தேசிய பென்ஷன் திட்டத்திற்கான வரி விதிப்பு தொடரும் என்று அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply