இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா:
தமிழகம் மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு மத்திய பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை. 10ஆண்டு காலமாக பின்னடைவை சந்தித்து வரும் இந்தியா, அடுத்த பட்ஜெட்டில் தலைநிமிர்ந்து நிற்கும்.
திமுக தலைவர் கருணாநிதி:
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. அரிசிக்கான சேவை வரி ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். கல்விக்கடன் வட்டியில் சலுகை, சூரிய ஒளித்திட்டங்கள், புதிய விமான நிலையங்கள் பற்றிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டுக் கூறும்படியான திட்டங்கள் எதுவுமே இல்லை. பெட்ரோல், டீசல், சமயல் எரிவாயு விலை உயர்வைத் தடுக்கவோ எந்தத் திட்டமும் இல்லை. அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மேலும் வாசல் திறக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
மத்திய அரசின் பட்ஜெட்டில் விலைவாசியை, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தேர்தலை மனதில் கொண்டே பல சலுகைகளை மத்திய அரசு அறிவிப்பு செய்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது