இணையத்தின் மூலம் விற்பனையாகும் எருமை மாடுகள். நூதன விளம்பரங்கள்

buffaloஇணையதளங்களில் அனைத்து பொருட்களையும் மிக எளிய முறையில் விற்பனை செய்யும் நடைமுறை தற்போது அதிகரித்து வருகிறது. OLX, Quikr, போன்ற இணையதளங்களில் பயன்படுத்திய பொருட்களையும் மிக எளிதில் பொதுமக்கள் விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த விவசாயிகள் எருமை மாடு, பசுமாடு போன்ற கால்நடைகளையும் இணையதளங்களின் மூலம் விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்னும் நகரை சேர்ந்த ஒருவர் தினமும் 9 லிட்டர் பால் கறக்கும் எருமை மாடு விற்பனைக்கு என இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ள எருமை விற்பனைக்கு என விளம்பரம் கொடுத்துள்ளார். இதுமட்டுமின்றி எருமைகளின் புகைப்படங்களையும் அவர்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கு இணைய அறிவு அதிகம் இல்லாத காரணத்தால் இதில் இடைத்தரகர்கள் போல ஒருவர் இருப்பதாகவும் அதனால் விலை அதிகம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் நாளடைவில் விவசாயிகளும் இணைய அறிவை பெற்றுவிட்டால் இந்த குறை நீக்கப்பட்டுவிடும் என கூறப்படுகிறது.

Leave a Reply