கட்டிடசாரம் இடிந்து விழுந்து விபத்து: சென்னை அருகே பரபரப்பு

கட்டிடசாரம் இடிந்து விழுந்து விபத்து: சென்னை அருகே பரபரப்பு

சென்னை கந்தன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கட்டிடம் ஒன்றின் சாரம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கந்தன்சாவடியில் கட்டிடப் பணியில் ஒருசில வட மாநில தொழிலாளர் பணி செய்து கொண்டிருந்தனர். நேற்று கட்டிடத்தில் கான்கிரீட் போடும் வேலை நடைபெற்று வந்தபோது திடீரென, பாரம் தாங்காமல் சாரம் சரிந்து விழுந்தது.

மேலும், சாரத்துடன் இணைந்து அதன் மேல் போடப்பட்டு இருந்த கான்கிரீட் மற்றும் இரும்பு பொருட்களும் கீழே விழுந்துள்ளததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 35 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் 15 ஆம்புலன்ஸ் மற்றும் 5க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 25 மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், இரண்டாம் கட்டமாக மீட்கப்பட்ட 7 பேரும் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கட்டட விபத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply