மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

மெக்சிகோ நாட்டில் சற்றுமுன்னர் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இந்த நிலநடுக்கம் மெக்ஸிகோ நகரிலிருந்து 348 கி.மீ., தொலைவில் மையம் கொண்டதாக புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

மெக்சிகோ அரசு நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 30 வினாடிகளுக்கு முன்பே இந்த நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டதால் உடனடியாக பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். சற்றுமுன் கிடைத்த தகவலின்படி இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என்று கூறப்படுகிறது.

https://twitter.com/Breaking911/status/964650777741615105

Leave a Reply