மலேசிய விமானப்பயணிகள் 298 மரணத்திற்கு ரஷ்யா காரணமா? திடுக்கிடும் தகவல்

மலேசிய விமானப்பயணிகள் 298 மரணத்திற்கு ரஷ்யா காரணமா? திடுக்கிடும் தகவல்
mh17
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச்.17 போயிங் 777 ரக விமானம் உக்ரைன் வான் எல்லையில் 33 ஆயிரம் அடி உயரத்தில்  பறந்துகொண்டிருந்தபோது ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேர்களும் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் இந்த விமானம் ரஷ்யாவின் தயாரிப்பான ‘பக்’ ஏவுகணையால்தான் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கக்கூடும் என்றும் இந்த செயலில் ரஷ்ய ராணுவத்தினர்களும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் நெதர்லாந்து நாட்டின் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து நாட்டின் பிரபல பத்திரிகையான ”வாக்ஸ்கிரான்ட்” என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘உக்ரைன் வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த மலேசிய விமானத்தை ரஷ்யாவின் ‘பக்’ ஏவுகணைதான் சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் இவ்வளவு தூரத்தில் இருந்து ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் திறன் உக்ரைன் வீரர்களுக்கு இல்லை என்றும் இதனால் ரஷ்ய ராணுவத்தினர்கள் அல்லது அவர்களது உதவியால் இந்த விமானம் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டது குறித்து நெதர்லாந்து அரசு நியமித்த  விசாரணைக்குழு விசாரணை நடத்தி வந்தது. விமானம் சுடப்பட்டது குறித்து இன்று இரவு  இந்த குழு முழு அறிக்கையை வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply