சீனாவில் வைக்கபட்டிருந்த உயரக்கட்டுப்பாடு இரும்புத்தடுப்பின் மீது பஸ் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர். சுமார் 20 பேர் வரை இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் உள்ள டியாஞின் என்ற மாகாணத்தில் 2.8 மீ உயரத்திற்கு மேல் உள்ள வாகனங்கள் நுழையக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருந்த இரும்புத்தடுப்பை கவனிக்காமல் ஒரு சொகுசு பேருந்து அதன் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் இரும்புத்தடுப்பு பேருந்தில் உள்ளே இருந்த பயணிகளின் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்து டியாஞின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பேருந்தில் மொத்தம் 50 பேர் பயணம் செய்ததாகவும், இந்த விபத்துக்கு காரணமான டிரைவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.