கென்யா தலைநகர் நைரோபியில் பேருந்து ஒன்றை கடத்தி சென்ற தீவிரவாதிகள் அந்த பேருந்தில் உள்ள முஸ்லீம் அல்லாத பயணிகளை குரான் புத்தகத்தை படிக்கும்படி வற்புறுத்தியதாகவும், படித்த மறுத்தவர்களை கொடூரமாக சுட்டு கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடூர செயலில் 28 கிறிஸ்துவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபி அருகே பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்து சோமாலியா நாட்டின் எல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் பேருந்தை வழிமறித்து நிறுத்தியது. பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கிய தீவிரவாதிகள் அதில் பயணம் செய்துகொண்டிருந்த 28 கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களை மண்டியிட்டு குர்ரான் புத்தகத்தை படிக்கும்படி வற்புறுத்தினர்.
இதற்கு அவர்கள் மறுத்ததால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் 28 பேர்களையும் தலையில் சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.