போராட்டம் தொடரும்: 17 தொழிற்சங்கங்களின் ஆதரவு இருப்பதால் அரசு கலக்கம்

போராட்டம் தொடரும்: 17 தொழிற்சங்கங்களின் ஆதரவு இருப்பதால் அரசு கலக்கம்

நேற்று மாலை முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்று வருவதால் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தினக்கூலி அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்து தற்காலிகமாக பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் தமிழகம் முழுவதும் இதற்கு போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிமனைகளில் போராட்டம் செய்ததால் அரசு செய்வதறியாது ஸ்தம்பித்துள்ளது,.

இந்த நிலையில் சென்னை தி.நகரில் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு செய்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், தற்போது 17 தொழிற்சங்கங்கள் எங்களுடன் இருப்பதாகவும் சிஐடியூ சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும்,, தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply