முடிவுக்கு வந்தது வேலைநிறுத்தம். நாளை முதல் பேருந்துகள் ஓடும்
ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களின் நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்த தமிழக போக்குவரத்து ஊழியர்கள் தற்காலிகமாக வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
முதல்கட்டமாக போக்குவரத்து துறைக்கு தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்க ஒப்புக்கொண்டதாலும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததாலும் இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி கொள்வதாக அறிவித்திருந்தாலும் மீண்டும் போராட்டம் தொடங்கும் சூழல் இல்லை என்றே கூறப்படுகிறது. தனியார் பேருந்துகள், சிற்றுந்துகள் ஆகியவை சென்னைக்கு வந்து நிலைமையை ஓரளவு சீர் செய்ததால் ஊழியர்கள் எதிர்பார்த்த இயல்பு நிலை பாதிப்பு சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் ஏற்படவில்ல்லை என்பதும் குறிப்பிடத்தகக்து.