எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறன! சில தகவல்கள்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறன! சில தகவல்கள்

நேற்று முன் தினம் மாலையில் இருந்து மூன்றாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் அவதி தொடர்கிறது. இந்த நிலையில் இன்று ஓரளவுக்கு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறன என்பது குறித்து வெளிவந்த தகவல்களை தற்போது பார்ப்போம்

திருவாரூர் மாவட்டத்தில் காலை நிலவரப்படி இயக்கவேண்டிய 239 அரசுப்பேருந்துகளில் 50 பேருந்துகள் இயக்கம்
அரியலூரில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 194 அரசுப்பேருந்துகளில் 31 பேருந்துகள் இயக்கம்
விருதுநகரில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 419 அரசுப்பேருந்துகளில் 152 பேருந்துகள் இயக்கம்
நாமக்கல்லில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 333 அரசுப்பேருந்துகளில் 192 பேருந்துகள் இயக்கம்
சிவகங்கையில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 600 அரசுப்பேருந்துகளில் 200 பேருந்துகள் இயக்கம்
நெல்லையில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 555 அரசுப்பேருந்துகளில் 222 பேருந்துகள் இயக்கம்
சென்னை நகரில் 35 சதவிகித பேருந்துகள் ஓடுகின்றன; அனைத்து பேருந்து பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
கரூரில் 85% பேருந்துகள் இயக்கம்; 5 பணிமனைகளில் உள்ள 270 பேருந்துகளில் 230 பேருந்துகள் இயக்கம்

மேலும் பல மாவட்டங்களில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம் செய்யப்பட்டு பேருந்துகள் ஒடிவருகின்றன. மேலும் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் பேருந்துகளில் சுமாரான கூட்டமே உள்ளது.

Leave a Reply