பாலில் அடங்கி உள்ள அநேக ஊட்டச்சத்துகள் வெண்ணெயிலும் காணப்படுகிறது. வெண்ணெயில் வைட்டமின்-ஏ சத்துக்கள் அதிகமான அளவில் காணப்படுகின்றன. இது தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாகும். லாரிக் மற்றும் லிசிதீன் போன்ற அமிலங்கள் வெண்ணெயில் நிறைந்துள்ளன.
இவை உடலில் கொழுப்புகளை சேரவிடாமல் விரைவில் செரிக்கச் செய்கின்றன. உடலை பூஞ்சை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் பல்வேறு ஆன்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை உடலில் ஏற்படும் நோய் காரணிகளை போக்கி உடலை காக்கின்றன.
வெண்ணெயில் வைட்டமின்-ஈ மற்றும் வைட்டமின்-கே குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன மேலும் நோய் எதிர்ப்பாற்றலை வழங்கக்கூடியவை. எளிதில் செரிமானமாகும் கொழுப்புச் சத்துகள் வெண்ணெயில் நிரம்பி உள்ளன. இவை உடலுக்கு சக்தி அளிப்பதுடன் உடலை புற்றுநோய் மற்றும் திசு சிதைவுகள் ஏற்படாமல் காக்கவல்லது.
பற்களை வலுப்படுத்தும் வைட்டமின்-டி மற்றும் கால்சியம் சத்துகள் வெண்ணெயில் நிறைந்துள்ளன. குழந்தைகளின் உணவுப் பொருட்களுடன் வெண்ணெய் சேர்த்துக் கொள்வதால் அவர்களின் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்குகிறது. அதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் மூளை தொடர்பான பல நோய்களை தடுக்கின்றன.