7ம் தேதிக்குள் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும்.. இல்லையென்றால் ஆபத்து!

தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனால் ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாக உள்ளது.

ரேஷன் கடை பணியாளர்கள், அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூன் 13ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் (கடையடைப்பு) ஈடுபடப் போவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அதற்கு முன்னதாகவே 7ம் தேதிக்குள் மக்கள் பொருட்களை வாங்கி பயன் அடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.