அடிமாட்டு விலைக்கு வீடுகள் விற்பனை:

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இடத்தில் இரண்டு மாதங்களாக வேலை இல்லாததால் பலர் செலவுக்கு கூட காசு இல்லாமல் உள்ளனர்

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் பலர் தங்கள் சொந்த வீடுகளை விற்பனை செய்ய முன் வந்துள்ளதாக தெரிகிறது

அவசர தேவைக்காக பொதுமக்கள் வீடுகளை விற்க நினைக்கும் இந்த நேரத்தில் ரியல் எஸ்டேட்காரர்கள் தங்களது பிசினஸ் தந்திரங்களை கையாண்டு வருகின்றனர்

வீடுகளை விற்க முயற்சி செய்பவர்களிடம் 45% விலையை குறைத்து அடிமாட்டு விலைக்கு வீடுகளை கேட்பதாக கூறப்படுகிறது

ஒரு சிலர் வேறு வழியில்லாமல் அடிமாட்டு விலைக்கு தங்கள் வீடுகளை விற்று வருவதாகவும் கூறப்படுகிறது இங்கிலாந்து நாட்டின் ரியல் எஸ்டேட் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது அந்நாட்டில் தொழிலதிபர்களுக்கு அதிர்ச்சி அடைந்ததாக உள்ளது

Leave a Reply