தஞ்சை-அரவக்குறிச்சி-திருப்பரங்குன்றம் தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தஞ்சை-அரவக்குறிச்சி-திருப்பரங்குன்றம் தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

annaதஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை அடுத்து சமீபத்தில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

இந்நிலையில் சற்று முன்னர் திமுக வேட்பாளர்களை பட்டியலை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதன்படி தஞ்சையில் அஞ்சுகம் பூபதியும், அரவக்குறிச்சி தொகுதியில் கே.சி பழனிச்சாமியும் திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனும் போட்டியிட உள்ளனர். அரவக்குறிச்சி, மற்றும் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த இடைத்தேர்தலில் பாமக, நாம் தமிழர், மக்கள் நலக்கூட்டணி மற்றும் பாஜக தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a Reply