பிரதமர் மோடி வெற்றி பெற்ற தொகுதியில் திடீர் இடைத்தேர்தல்.

modiகடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி,  முலாயம் சிங் யாதவ் ஆகியோர்கள், ஒரு தொகுதியை தக்கவைத்துக்கொண்டு ஒரு தொகுதியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா செய்த இரண்டு தொகுதிகளுக்கும் வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி, வதோரா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியை தக்கவைத்துக்கொண்டு, வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல முலாயம் சிங்கும், மைன்பூரி தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

தெலங்கானா  முதல்வராக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவ் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, மேடக் தொகுதி எம்.பி. பதவியை அவரும் ராஜிநாமா செய்தார். எனவே ராஜினாமா செய்யப்பட்ட இந்த மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் அஸ்ஸாம், ஆந்திரப்பிரதேசம், சிக்கிம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் காலியாக உள்ள 33 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 20ஆம் தேதி தொடங்கி, 27ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனு பரிசீலனை 28ஆம் தேதி நடைபெறுகிறது. மனுவை திரும்பப்பெற வரும் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.

வாக்குப்பதிவு அடுத்த மாதம் 13ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 16ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவுக்குப் பிறகு காலியாக உள்ள மகாராஷ்டிர மாநிலம் பீட் தொகுதிக்கான  இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply