ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு: மீண்டும் சிக்கலில் மாறன் சகோதரர்கள்
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்பட அனைவரையும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி பேரனும், முரசொலி மாறானின் மகனுமான தயாநிதி மாறன், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராகஇருந்த போது, ஏர்செல் நிறுவன உரிமையாளரான சிவசங்கரனை மிரட்டி அவரது நிறுவன பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு விற்க வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கபப்ட்டது. இந்த தீர்ப்பில் தயாநிதி மாறன்,கலாநிதி மாறன் ஆகிய மூவர் மீதும் சி.பி.ஐ தொடர்ந்துள்ள குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் மூவரையும் இந்த வழக்கிலிருந்து எந்த நிபந்தனையும் இன்றி விடுவிப்பதாக நீதிபதி ஷைனி தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ மேல்முறையீடு செய்ய இருப்பதாவும் இது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனையில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளதாகவும் தகவலகள் வெளியாகியுள்ளன. இதனால் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.