விமான கடத்தலில் ஈடுபட்டால் தூக்குதண்டனை. புதிய மசோதாவுக்கு ஒப்புதல்.

flight hijackவிமானக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்றிரவு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமானக் கடத்தல் தடுப்புச் சட்டம் 2010-ஐ திரும்பப் பெறுவதற்கும், அதற்குப் பதிலாக விமானக் கடத்தல் தடுப்பு மசோதா 2014-ஐ அறிமுகப்படுத்துவதற்கும் அமைச்சரவையில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய மசோதாவின்படி இனிமேல் விமானக் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு நேரடியாக தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

1999-ல் காந்தகாரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது மற்றும் கடத்தப்பட்ட விமானம் மூலம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதை அடுத்து, விமானக் கடத்தல் எதிர்ப்பு சட்டம் 2010ல் சிலப் பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. அதில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விரைவில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply