கேபிள் டிவி சங்கம் நடத்துவதாக இருந்த ஸ்டிரைக் திடீர் வாபஸ்.

cable tvசொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருட சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கக்கோரி இன்று தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. ஒளிபரப்பை நிறுத்த உள்ளதாக தமிழக கேபிள் டி.வி. சங்கங்கள் அறிவித்து இருந்தன

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விடுமுறை கால நீதிபதி விசாரணை செய்ய மறுத்ததை கண்டித்தும், கர்நாடக உயர்நீதிமன்றம் உடனடியாக ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை பரிசீலனை செய்து அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரியும் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தது.

ஆனால் இந்த ஸ்டிரைக் இன்று திடீரென வாபஸ் பெறப்பட்டதாக கேபிள் டிவி சங்கத்தினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக தமிழக கேபிள் டிவி ஆப்ரட்டர்கள் பொது நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: எங்கள் சங்கம் சார்பில் அக்டோபர் 4 கேபிள் டிவி ஒளிபரப்பு ரத்து மற்றும் இதர போராட்டங்களும் அறிவித்து இருந்தோம். ஆனால் அரசு தரப்பு செய்தி ஒளிபரப்புகளை தடை செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டது. இதனால் இதர போராட்டங்கள் நடைபெறும். அதே நேரத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு வழக்கம் போல ஒளிபரப்பாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply