பிரான்ஸ் தாக்குதலுக்கு அகதிகள் காரணமா? பெரும் பரபரப்பு
பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு சுமார் 150 பேர்களுக்கும் மேல் உயிரிழந்த சம்பவத்திற்கு அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் நாட்டிற்கு நுழைந்ததுதான் காரணம் என அந்நாட்டு உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. இந்த தகவல் வெளியானதும் ஆத்திரமடைந்த சிலர் அகதிகள் தங்கியிருந்த முகாமுக்குள் புகுந்து தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தீவைப்பு சம்பவத்தினால் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. தகவல் அறிந்து உடனடியாக தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று அகதிகள் அனைவரையும் உயிரோடு காப்பாற்றியதால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
பாரீஸ் தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் அகதிகள் முகாம் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாரீஸில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அகதிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டின் தீவுப் பகுதிகளுக்கு இப்போதைய நிலையில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கரையேறி வருகின்றனர். அவர் களின் நிலைமை கேள்விக் குறியாகி உள்ளது.
English Summary: Calais migrant camp on fire as France reels from Paris terror attacks