சென்னை ஓட்டல்களில் கன்றுக்குட்டி கறியா? அதிர்ச்சி தகவல்

சென்னை ஓட்டல்களில் கன்றுக்குட்டி கறியா? அதிர்ச்சி தகவல்

சென்னையில் உள்ள ஒருசில ஓட்டல்களில் கன்றுக்குட்டி கறியை, சிக்கன் மற்றும் மட்டன் என விற்பனை செய்த ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே சென்னையில் உள்ள பெரியமேடு பகுதி ஓட்டல்களில் சிக்கன், மட்டன் என்று கூறி கன்றுக்குட்டி கறியை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த நிலையில் நேற்று திடீரென உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒருசில ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிக்கன், மட்டன் என கூறி கன்றுக்குட்டி கறி விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து ஒருசில ஓட்டல்களில் 300 கிலோ கறியையும், சுத்தமற்ற மசாலாக்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும் சட்டப்படி மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் கீழ் அரசு ஒதுக்கிய இறைச்சிக் கூடங்களில் மட்டுமே ஆடு, மாடுகளை வெட்ட வேண்டும். ஆனால், கன்றுக் குட்டிகளை இறைச்சிக்கு வெட்டக் கூடாது என்ற விதியை மீறி அவற்றை வெட்டினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply