மேலாடை இன்றி சூரியக்குளியல். கலிபோர்னியா கவுன்சிலர்கள் தீர்மானம்

californiaஆண்களுக்கு சமமாக பெண்களும் மேலாடை இல்லாமல் சூரிய குளியலில் ஈடுபடலாம் என கலிபோர்னியா கடற்கரை நகரமான வெனிஸ் நகர கவுன்சிலர்கள் தீர்மானம் இயற்றியுள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள வெனிஸ் உள்பட ஒருசில கடற்கரை நகரங்களில் பெண்கள் மேலாடை இன்றி சூரிய குளியலில் ஈடுபட கடந்த சில வருடங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல பெண்கள் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பெண்களூம் மேலாடை இல்லாமல் சூரிய குளியலில் ஈடுபட அனுமதிக்கக்கோரி தீர்மானம் ஒன்று நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெனிஸ் கடற்கரை நகர கவுன்சிலர்கள் இணைந்து ஒருமித்த கருத்துடன் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாகவும், இருப்பினும் இந்த கோரிக்கை பற்றி இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபைக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறப்படுகிறது.

கவுன்சிலர்கள் இயற்றிய இந்த தீர்மானத்தில் வெனிஸ் கடற்கரையானது இத்தாலி, ஐரோப்பிய கலாச்சாரத்தை அடிப்படையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அமெரிக்காவின் பல பகுதிகள் உட்பட உலகின் பல இடங்களில் மேலாடை இல்லாமல் சூரிய குளியல் செய்ய அனுமதி உள்ளது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் மேலாடை இல்லாமல் சூரிய குளியல் செய்ய உரிமையுள்ளது. அதை நிலை நாட்டவே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply