உ.பி.,யைத் தொடர்ந்து சத்தீஸ்கரிலும் பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை
உத்தரப்பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கரிலும் பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று ராமன்சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பசுக்களுக்கு என்று பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் சில மாதங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திலும், பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பசுக்களுக்கு என்று உணவு, குடிநீர் வழங்க ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும். பசுக்களை கோமாதா என்று அழைப்பார்கள். மாட்டுக்கொட்டகைகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சிறப்பாக பராமரிக்கப்படும் முதல் 10 மாட்டுக்கொட்டகைகளுக்கு வருடத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.