உலகின் மிகப்பெரிய இந்து கோவில் கட்டும் இந்தியாவுக்கு கம்போடியா எதிர்ப்பு.

[carousel ids=”65491,65492″]

உலகிலேயே மிகப்பெரிய இந்து கோவில் ஒன்று பீகார் மாநிலத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.500 கோடி செலவில் பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு சம்பரன் மாவட்டம் கெசாரியாவுக்கு அருகில் ஜானகி நகரில் உருவாக உள்ளது. மும்பையை சேர்ந்த வாலேசா கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் என்ற நிறுவனம் கட்டவுள்ள இந்த கோவில் 2,800 அடி நீளமும், 1,400 அடி அகலமும், 405 அடி உயரமும் கொண்டதாக அமையவுள்ளது. இந்த கோவிலுக்கு கம்போடியா அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கம்போடியா நாட்டில் உள்ள 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த அங்கோர் வாட் என்ற இந்து கோவில் பிரதியை போல் இந்தியா இந்த கோவிலை கட்ட திட்டமிட்டுள்ளதாக கம்போடியா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசு இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ள குறிப்பு ஒன்றில் ”வணிக நலனுக்காக அங்கோர் வாட் கோவில் போல் மற்றொரு கோவில் கட்டப்படுவது ஒரு உலக பாரம்பரிய சின்னத்தை அவமதிக்கிற செயல். இதனை தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது.

Leave a Reply