கம்போடியா நடிகைக்கு ஒருவருடம் நடிக்க தடை. அதிகளவில் கவர்ச்சி காட்டியதால் நடவடிக்கை
பிரபல கம்போடியா நாட்டின் கவர்ச்சி நடிகை டென்னி குவான் என்பவர் ஒருவருடம் நடிப்பதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. டென்னி நடித்த திரைப்படங்கள் அதிகளவு கவர்ச்சியாக இருப்பதாகவும், நாட்டின் இளைஞர்கள் அவரது படம் பார்த்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டதால் அந்நாட்டு அரசு இந்த அதிரடி தடையை விதித்துள்ளது.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டென்னி, மற்ற நடிகைகளை போல் தான் தானும் நடித்துள்ளதாகவும், தனக்கு விதிக்கப்பட்ட தடை அநியாயமானது என்றும் தெரிவித்துள்ளார்.
எந்தவிதமான உடை அணிந்து நடிக்க வேண்டும் என்பது தனது உரிமை என்றும், அதே நேரத்தில் தனது கவர்ச்சி கலாச்சாரத்தை கெடுப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அரசு தரப்பில் இதுகுறித்து கூறியபோது, ‘அரசு அதிகாரிகள் டென்னியை ஒரு மகள் போல நினைத்து அறிவுரை கூறியதாகவும், ஆனால் கவர்ச்சியாக நடிப்பது தனது தனிப்பட்ட உரிமை என்று அவர் பிடிவாதம் செய்ததால் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறினர்.