இயக்குனர்-ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் மரணம்
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவரது உயிர் பிரிந்ததாகவும் தெரிகிறது.
ஆரம்பகாலத்தில் ஒளிப்பதிவாளராக இருந்த என்.கே.விஸ்வநாதன் ‘சட்டம் என் கையில்’, ‘கல்யாண ராமன்’, ‘கடல் மீன்கள்’, ‘மீண்டும் கோகிலா’, ‘சங்கர்லால்’, போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் அவர் ‘இணைந்த கைகள்’, ‘நாடோடி பாட்டுக்காரன்’, ‘பெரிய மருது’, உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். நமீதா நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘ஜகன்மோகினி’ என்ற படமே இவர் இயக்கிய கடைசி திரைப்படம் ஆகும்.
என்.கே.விஸ்வநாதன் அவர்கள் மரணத்திற்கு கோலிவுட் பிரமுகர்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்