சபரிமலை ஐயப்ப சீசன் தொடங்கி உள்ளதால் நாடு முழுவதும் இருந்து கேரள மாநிலத்துக்கு ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் ரயில்களில் வருகின்றனர்.
இவர்களில் ஒரு சிலர், விதிகளை மீறி ரயிலுக்குள்ளே குளிக்கின்றனர்.சிலர் கற்பூரம் ஏற்றி பூஜை செய்வதாகவும் இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்ற கூடாது.
தடையை மீறி கற்பூரம் ஏற்றினால், அவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் யாரும் ரயில்கழிவறையில் குளிக்க கூடாது எனவும் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.