பிரக்ஸிட் விவகாரம். இன்று திருப்புமுனை ஏற்படுமா?

பிரக்ஸிட் விவகாரம். இன்று திருப்புமுனை ஏற்படுமா?

கடந்த 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது என்று முடிவு எடுக்கப்பட்டு அதற்காக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 55% பொதுமக்கள்  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக ஆதரவாகவும் 45% மக்கள் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். வாக்கெடுப்பின் வெற்றி காரணமாக பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. ஆனால் இந்த வாக்கெடுப்பின் முடிவில் உடன்பாடு இல்லாததால் பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியையும், எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து தற்போது தெரேசா மே பிரதமராக உள்ளார்.

இந்நிலையில், பிரிட்டன் நீதிமன்றம் பிரக்சிட் விவகாரம் குறித்த வழக்கு ஒன்றில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் விலகுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று பிரிட்டன் அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது உடனடியாக  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் அரசின் நடவடிக்கையில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

இந்நிலையில், பிரிக்ஸிட் வாக்கெடுப்பு தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறவுள்ளது. இதில் வாக்க்கெடுப்பை மறுஆய்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply