நரேந்திர மோடி அமைச்சரவையை விட என் அமைச்சரவையில் சிக்கிய அமைச்சர்கள் அதிகம். கனடா பிரதமர்
இந்தியாவில் இருக்கும் சீக்கிய அமைச்சர்களின் எண்ணிக்கையை விட கனடா நாட்டில் உள்ள சீக்கிய அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் சமீபத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் பாகிஸ்தானை சேர்ந்த ஜஹான் என்ற மாணவர், கனடிய அரசில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாக கூறியபோது, அந்த மாணவருக்கு நன்றி கூறிய ஜஸ்டின் ட்ரூடோ, பின்னர் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரையில் உள்ள சிக்கிய அமைச்சர்களின் எண்ணிக்கையை தனது அரசில் உள்ள சீக்கிய அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகம் என பெருமைபாய கூறினார். அப்போது மாணவர்களிடையே பெருத்த கரகோஷம் எழுந்தது.
பிரதமர் ஜஸ்டின் தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹர்ஜித் சாஜன் உட்பட 4 சீக்கிய அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 17 சீக்கிய எம்.பி.க்கள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிரதமர் ஜஸ்டின் சீக்கிய குருத்வாராவுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாலும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் கனடாவில் வாழும் இந்தியர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.