கனடா தலைநகர் ஒட்டாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு பாதுகாப்புப் படை வீரர் போன்று உடையணிந்து வந்த நபர் ஒருவர், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயும் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார்.
போர் நினைவிடம், நாடாளுமன்ற மைய கட்டடம், ரிடேயூ கட்டடம் ஆகிய பகுதிகளில் நோக்கி அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இந்த தாக்குதல் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”பல்வேறு நாடுகளில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகரித்திருக்கிறது. தற்போது கனடாவிலும் தீவிரவாத செயல்கள் அரங்கேறியுள்ளன. இந்த தாக்குதலால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.