வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 3 மாத சம்பளம் உடனடி கடன். கனரா வங்கி அறிவிப்பு

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 3 மாத சம்பளம் உடனடி கடன். கனரா வங்கி அறிவிப்பு
canara bank
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை வெள்ளம் காரணமாக பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல், கையில் பணமின்றி தவித்து வரும் நிலையில், மாத சம்பளம் பெறும் நபர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடனாக வழங்கப்படும் என கனரா வங்கி அறிவித்துள்ளது. இதனால் மாதச்சம்பளம் பெறும் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் இன்று வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “சென்னையில் தேவையான இடங்களில் நடமாடும் ஏ.டி.எம். வசதி கடந்த 4-ம் தேதி முதல் செயல்படுகிறது.

எங்கள் வங்கி மற்றும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ள வசதியாக 40 பி.ஓ.எஸ். மொபைல் எந்திரங்கள் உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் கையேந்தி சாதனங்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறது.

மாத சம்பளம் பெறும் நபர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடனாக வழங்கப்படும். வீடு, கார் பழுது செய்ய அதன் மதிப்பில் 10 சதவீதம் தொகை கடனாக எந்த பரிசீலனை கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும். நவம்பர், டிசம்பர் மாத தவணை தாமதமாக கட்டுபவர்களுக்கு அபராத வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

சேதமடைந்த, தொலைந்த ஏ.டி.எம். அட்டைதாரர்களுக்கு புதியகார்டுகள் இலவசமாக வழங்கப்படும். நுகர்வு கடன்கள் ரூ.10 ஆயிரம் வரை எந்த பிணையங்களும் இல்லாமல் வழங்கப்படும். அப்பல்லோ முனீச் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார காப்பீட்டுத் தீர்வுகளை துரிதமாக பெற உதவப்படும்”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply