பொதுத் துறை வங்கியான கனரா வங்கியில் கனரா வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager-Security (MMGS-II)
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 25 – 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்திய முப்படைகள், துணை ராணுவப்படைகள், காவல் துறையில் Assistant Commandant/Captain போன்ற அதிகாரி தகுதிக்குரிய பணியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம், மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்விற்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதனை நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager,
Canara Bank Recruitment Cell,
H.R. Wing, Head Office,
112, J.C.Road, Bangalore-560002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.08.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.canarabank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.