ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள ஒரு பகுதியில் மலேசிய விமானம் மிதப்பதாகவும், அந்த விமானத்தை ஒரு மிகப்பெரிய கப்பல் மீட்டுவிட்டதாக தவறான தகவல் ஒன்றை Canary island என்ற நாட்டின் எமர்ஜென்ஸி குழுவினர் டுவிட்டரில் தகவல் தெரிவித்ததால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Canary island என்ற நாட்டின் எமர்ஜென்ஸி குழுவினர் நேற்று கடலில் வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நடுக்கடலில் தூரத்தில் ஒரு விமானம் மிதந்து கொண்டிருப்பதை பைனாகூலர் மூலம் பார்த்தனர். உடனடியாக அந்த எமர்ஜென்ஸி குழுவில் இருந்த ஒருவர் டுவிட்டரில் மாயமான மலேசிய விமானம் கிடைத்துவிட்டதாகவும், அந்த விமானத்தை கப்பல் ஒன்று மீட்டு கரைக்கு எடுத்து வருவதாகவும் செய்தி ஒன்றை மதியம் 3.01 மணிக்கு பதிவு செய்தார்.
அடுத்த சில நொடிகளில் உலகம் முழுவதும் உள்ள பல ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தின. அதன்பின்னர் எமர்ஜென்ஸி குழுவினர் அந்த கப்பலின் அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அது ஒரு விமானம் தாங்கும் கப்பல் என்றும், ஒரு விமானத்தை அந்த கப்பல் வேறொரு இடத்திற்கு எடுத்து செல்கிறது என்றும் தூரத்தில் இருந்து பார்க்கும்போது கப்பல் சரியாகதெரியாமல், விமானம் மட்டும் கடலில் மிதப்பதாக தெரிந்தது. அதன்பின்னர் 3.08க்கு தாங்கள் கொடுத்த செய்தி தவறானது என்று மீண்டும் டுவிட்டரில் அந்த எமர்ஜென்ஸி குழு ஊழியர் தெரிவித்தார். இதனால் 7 நிமிடங்களில் உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்த பரபரப்பு அடங்கியது.