அதிகம் திராட்சை சாப்பிட்டால் கேன்சர்! அதிர்ச்சி ரிப்போர்ட்

orange

சிட்ரஸ் பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் மெலனோமா என்ற சருமப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறுகிறது ஒரு விரிவான ஆய்வு.

அமெரிக்காவில் ஆய்வாளர்கள் ஒரு லட்சம் மக்களின் உணவுப் பழக்கத்தை ஆய்வு செய்தனர். அதில் 36 சதவிகித மக்களுக்கு மெலனோமா வரும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்ததாகக் கண்டறிந்தனர். அவர்கள் மற்றவர்களை விட அடிக்கடி சிட்ரஸ் பழங்கள் அல்லது பழச்சாறுகளை தினமும் 1.6 தடவை அருந்தியவர்கள். மற்றவர்கள் ஒரு வாரத்தில் இரண்டு முறை மட்டுமே சிட்ரஸ் பழங்களை உட்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஷாவெய் வூ கூறுகையில், ‘திராட்சைப் பழம் மற்றும் ஆரஞ்சுகளை அதிக அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மெலனோமா சருமப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் அதை தடை செய்வதற்கோ அறவே தவிர்க்கச் சொல்லவோ இன்னும் விரிவான  ஆராய்ச்சிக்குப் பிறகே முடிவாகக் கூற முடியும். எனவே இத்தகைய சூழலில் நாங்கள் யாரையும் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தவில்லை. ஆனால் திராட்சை பழங்களையோ ஆரஞ்சு பழச்சாறையோ குடித்துவிட்டு நீண்ட நேரம் வெயிலில் செல்ல வேண்டாம் என்று மட்டும் கூறக் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

26 வருடங்களாக நடைபெறும் இந்த ஆராய்ச்சியில் ஒரு லட்சம் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றிருந்தனர். இதில் 1840 நபர்கள் மெலனோமாவில் பாதிக்கப்படிருந்தது தெரிய வந்துள்ளது.

Leave a Reply