சசிகலா-தினகரன் சந்திப்பு இனி நடக்கவே நடக்காதே? திடுக்கிடும் தகவல்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்து வரும் சசிகலாவை நேற்று டிடிவி தினகரன் சந்திக்க சென்றார். மகாதேவன் மரணம், தற்போதைய அரசியல் சூழ்நிலை, அதிமுக சின்னம் குறித்த ஆலோசனை, டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகாந்த் சந்திரன் குறித்த தகவல் ஆகியவை குறித்து சசிகலாவிடம் ஆலோசனை பெறவே டிடிவி தினகரன் நேற்று பெங்களூர் சென்றதாக கூறப்பட்டது.
ஆனால் நேற்று சசிகலாவை அவரால் சந்திக்க முடியவில்லை. சசிகலா தினகரன் மீது அளவுகடந்த கோபத்தில் இருப்பதால் சந்திக்க விரும்பவில்லை என்றும், மாலை ஐந்து மணிக்கு மேல் சசிகலாவை சந்திக்க அனுமதி இல்லாததால் அவரால் சந்திக்க முடியவில்லை என்றும் இரு மாறுபட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர் இன்று சசிகலாவை சந்திக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்றும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறை விதிகளின்படி, திங்கள், புதன், வெள்ளி மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி தரப்படும். எனவே இன்றைய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் சிறை வட்டாரத்தில் இருந்து வரவில்லை. இந்நிலையில் இன்று டெல்லியில் இருந்து தினகரனை விசாரிக்க அதிகாரிகள் சென்னை வந்துள்ளதால் தினகரன் என்று கைதாக வாய்ப்பு இருப்பதாகவும், ஒருவேளை கைதானால் அவர் இனிமேல் சசிகலாவை சந்திக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.