குடைமிளகாய் – சீஸ் தோசை

6e47af80-e43f-4802-be47-a06f41e795f6_S_secvpf

தேவையானவை:

தோசை மாவு – ஒரு கப்,
மஞ்சள் குடமிளகாய் – 1
சிவப்பு குடமிளகாய் – 1
பச்சை குடமிளகாய் – 1,
பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா கால் கப்,
துருவிய சீஸ் – கால் கப்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

• குடைமிளகாய்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• தவாவில் தோசை மாவை கொஞ்சம் கனமாக ஊற்றவும்.

• பிறகு குடைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை தோசை மேல் பரவலாக வைத்து, சீஸை மேலாக தூவிவிடவும்.

• சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும் (அடுப்பை ‘சிம்’மில் வைத்து செய்யவும்).

• ஒரு பக்கம் வெந்ததும் அப்படியே எடுத்து பரிமாறவும்.

Leave a Reply