கேப்டன் என்ற அடைமொழியை ராணுவத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும், மற்றவர்கள் அதை பயன்படுத்துவதை தடைவிதிக்க வேண்டும் என்றும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் கோவிந்தராஜ் என்பவர் இன்று உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், ‘கேப்டன் என்ற அடைமொழி ராணுவ வீர்ர்களுக்கு மட்டுமே சொந்தமானது. சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தலைவராக மாறியுள்ள விஜயகாந்த், ராணுவத்தின் எந்த ஒரு பதவியிலும் இருந்ததில்லை. இந்நிலையில் அவர் கேப்டன் என்ற அடைமொழியை கடந்த 15 வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்.
1950ஆம் ஆண்டு, இயற்றப்பட்ட ராணுவ சட்டத்தின் பதவி மற்றும் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்தப்படுத்துவதை தடை செய்யும் சட்டப்பிரிவின் படி, ராணுவ அதிகாரிகள் மட்டுமே, ‘கேப்டன்’ என்ற அடைமொழியை பயன்படுத்த முடியும். சாதாரண குடிமக்கள் பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது, எனவே கேப்டன் என்ற அடைமொழியை விஜயகாந்த் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும்” என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
விஜயகாந்த் இன்னும் ஒரு மாதத்தில் கேப்டன் என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.