சென்னையில் பூகம்பமா? ஷங்கர் ஏற்படுத்திய பரபரப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் படக்குழுவினர்களுடன் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள சாலிகிராமம் பகுதியில் இந்த படத்தின் இடம்பெற்றுள்ள கார் ஒன்றை வெடிக்க செய்யும் காட்சியை படமாக்கினார். இந்த காட்சி வெகு இயல்பாக வரவேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த காரை உண்மையான வெடிகுண்டு வைத்து தகர்த்து படமாக்கியுள்ளார்.
சென்னையின் மையப்பகுதியில் நடந்த இந்த படப்பிடிப்பால் அந்த பகுதியே பயங்கரமாக வெடிச்சத்தத்தால் அதிர்ந்தது. அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ளவர்கள் பூகம்பம் வந்துவிட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு சத்தமும், அதிர்வும் இருந்தது. என்னதான் முறையான அனுமதி பெற்று ஷங்கர் படமாக்கியிருந்தாலும் ஷங்கர் இதுபோன்ற காட்சியை குடியிருப்புகள் இருக்கும் இடத்திற்கு அருகில் எடுத்தது தவறுதான் என்று பலர் பேசி வருகின்றனர்.