முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு. அப்பல்லோ முன் குவிந்த தொண்டர்கள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று திடீரென மாலை ஐந்து மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன
இதனால் உடனடியாக முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் உடல்நிலை குறித்த தகவல் அறிய மூத்த அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அப்போலோ விரைந்தனர்
தமிழக பொறுப்பு கவர்னர் கிருஷ்ணா ராவ் மும்பையில் இருந்து அவசரமாக சென்னை வந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்த விபரங்களை கேட்டறிந்து பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர்களுக்கு தகவல் அனுப்பினார்.
நேற்று இரவு முதல் கடுங்குளிர் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் அ.தி.மு.க தொண்டர்கள் பெருந்திரளாக அப்போலோ முன்பு குவிந்துள்ளனர். இதனால் அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.