1200 கார்களுடன் சென்ற சரக்கு கப்பல் மூழ்கும் அபாயம். அதிர்ச்சி புகைப்படங்கள்

 ship  2

இங்கிலாந்து நாட்டில் 1,200 கார்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு கப்பல் ஒன்று தரைதட்டி கவிழும் நிலையில் இருப்பதால் அதில் உள்ள விலையுயர்ந்த கார்கள் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ship  3

இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் என்ற துறைமுகத்தில் இருந்து ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல் கடந்த சனிக்கிழமை மாலை புறப்பட்டது.  இந்த கப்பலில் 1200 சொகுசுக்கார்கள், ஜே.சி.பி. எந்திரங்கள், கிரேன்கள், லாரி, டிரெய்லர்கள், கற்களை உடைக்கும் கிரஷர் இயந்திரங்கள் உள்ளிட்ட பல விலைமதிப்புள்ள பொருட்கள் இருந்தது. இந்த கப்பலின் மொத்தம் 500 டன்களுக்குரிய பொருட்கள் ஏற்றிச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ship  4

மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த கப்பல் ஐசில் தீவு என்ற பகுதிக்கு வந்தபோது திடீரென திசைமாறி சென்றதால் தரைதட்டியது. இதனால் அந்த கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக ஒருபுறமாக சாயத்தொடங்கியது. தற்போது 52டிகிரி சாய்வாக இருக்கும் அந்த கப்பல் எந்த நேரமும் கவிழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. கப்பல் கவிழ்ந்தால் அதில் இருக்கும் கார்கள் உள்பட அனைத்து பொருட்களும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இந்த கப்பலில் இருந்த 25 ஊழியர்கள் கடலோர கப்பல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.

   ship  5 ship  6 ship 1 ship 7 ship 8

Leave a Reply