அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பிரபல கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 93. அரசியல்வாதிகளை கேலிச்சித்திரங்கள் மூலம் கார்ட்டூன் வரைந்து மக்களின் நன்மதிப்பை பெற்ற லக்ஷமனன் மரணம் ஊடகத்துறைக்கு ஒரு பெரிய இழப்பு என கருதப்படுகிறது.
காமன் மேன் என அனைவராலும் அன்புடன் அழைக்கபடும் இவருக்கு சமீபத்தில் பக்கவாதம் ஏற்பட்டு அவரின் உடல் பெரும்பாலும் செயலிழந்தது. அந்த நிலையில் கூட ஒரே ஒரு கையால் அவர் வீட்டில் இருந்தபடியே கேலிச்சித்திரங்கள் வரைந்து பத்திரிகைக்கு கொடுத்து வந்தார். அவருடைய கார்ட்டூனை வாங்குவதற்காக தினமும் புனாவில் இருந்து அவரது வீட்டுக்கு ஒருவர் வந்து சென்றார். ராமன் மகசேசே, பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றிருக்கும் இவரது கார்ட்டூன்கள் பல கதைகளை சொல்லும்
மக்களின் வலிகளை உணராதவர்களைப் பேனா முனை கொண்டு குத்தி கிழித்தவர் அவர். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ,’you said it’ என்கிற பெயரில் ஐம்பது வருடங்களுக்கு இடைவிடாமல் காமன்மேன் மூலம் மக்களின் வலிகளை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை அவர் கொண்டு சேர்த்தார். மென்மையாக, சிரிக்கவைத்தபடியே அந்த அறுவை சிகிச்சை ஐம்பது வருடங்கள் நடந்தது. சாதாரண மனிதனை கவனப்படுத்திக் கொண்டே இருந்த அவருக்கு அஞ்சலிகள்!