ஓபிஎஸ் சொத்துகுவிப்பு வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது? சென்னை ஐகோர்ட் கேள்வி

ஓபிஎஸ் சொத்துகுவிப்பு வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது? சென்னை ஐகோர்ட் கேள்வி

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு புகாரில் இதுவரை விசாரணை நடத்தாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் துணை முதலமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என்றும் உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விபரங்கள் இருந்தால் அதனை சிபிஐயிடம் தெரிவியுங்கள் என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை ஒத்தி வைத்தார்.

Leave a Reply