விஜயகாந்த்- பிரேமலதா மீது அவதூறு வழக்கு.

பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடந்த தேமுதிக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்பட 5 பேர் முதல்வரை பற்றி அவதூறாக பேசியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் தேதி நடந்த ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் விஜயகாந்த் உள்பட அனைவரும் திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். முதல்வர் ஜெயலலிதாவை விஜயகாந்த், பிரேமலதா, பார்த்திபன், வெங்கடேசன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் உள்பட மொத்தம் ஐந்து பேர் மீது இன்று விழுப்புரம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் மணிராஜ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை கடுமையாகவும், தரக்குறைவாகவும் விமர்சனம் செய்ததாகவும், காவல்துறை குறித்து அவதூ’றாக பேசியதாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது

Leave a Reply