பீட்டா அமைப்பை தடை செய்ய சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

பீட்டா அமைப்பை தடை செய்ய சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

கடந்த சில நாட்களாக மெரீனா உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தில் வைக்கப்பட்ட இன்னொரு கோரிக்கை பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பது. தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக பீட்டாவுக்கு எதிராக தற்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

ஆனால் இதை போராட்டமாக செய்யாமல், சட்டரீதியாக அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பீட்டா அமைப்பை தடை செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் இந்த வழக்கை பதிவு செய்ததோடு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply