சசிகலா மீது ஆள்கடத்தல் வழக்கு. மதுரை எம்.எல்.ஏ புகார் எதிரொலி

சசிகலா மீது ஆள்கடத்தல் வழக்கு. மதுரை எம்.எல்.ஏ புகார் எதிரொலி

தன்னையும், அதிமுக எம்.எல்.ஏக்களையும் கடத்தி கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வைத்திருந்ததாக மதுரை எம்.எல்.ஏ சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூவத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆள்கடத்தல் உள்பட மூன்று பிரிவுகளில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அவருக்கு பின்னடைவாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply