கருணாநிதி, ஸ்டாலின் மீது காவல்துறை வழக்கு

karunanidhi an stallinகடந்த சனிக்கிழமை சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானதையடுத்து திமுக-அதிமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து  திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராயப்பேட்டை காவல்நிலையத்தில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் இருவர் மற்றும் பல திமுக-வினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கருணாநிதி இல்லம் உள்ள கோபாலபுரம் அருகே பயங்கர ஆயுதங்களால் தங்களைத் தாக்கியதாக அதிமுக-வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 (சூறையாடல்), பிரிவு 148 (சூறை மற்றும் பயங்கர ஆயுதங்களை வைத்திருத்தல்), பிரிவு 324 (அபாயகரமான ஆயுதங்கள் கொண்டு காயம் ஏற்படுத்துவது), பிரிவு 336 (பிறரது பாதுகாப்புக்கு மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது), மற்றும் 506/2 (அச்சுறுத்தல் அல்லது மிரட்டலுக்கான தண்டனைப் பிரிவு) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக மற்றும் அதன் தலைவர்கள் வீட்டினருகே அதிமுக-வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதினால் திமுகவினருக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

Leave a Reply