இரண்டாக உடைகிறது ஸ்பெயின். புதிய நாட்டின் பெயர் ‘கடலோனியா?

இரண்டாக உடைகிறது ஸ்பெயின். புதிய நாட்டின் பெயர் ‘கடலோனியா?
catalonia
ஸ்பெயின் நாட்டில் இருந்து தன்னாட்சி பெற்ற மாகாணமாக விளங்கி வரும் வடகிழக்கு மாகாணமான கடலோனியா, ஸ்பெயினில் இருந்து தனியாக பிரிந்து தனி நாடாக செயல்படவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

சுமார் 75 லட்சம் மக்கள் வாழும் கடலோனியா மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் தனிநாடு வேண்டி பல கட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவால் சமீபத்தில் அங்கு வாழும் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கான ஓட்டு பதிவு நேற்று நடந்தது. இந்த ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் ஸ்பெயினில் இருந்து பிரிவது என்று கருதுபவர்களே அதிக அளவில் வாக்களித்திருப்பதாக முதல்கட்ட முடிவுகளால் தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து கருத்து வாக்கெடுப்பில் பிரிவினைவாதிகள் வெற்றி பெற்றதாகவும், அப்பகுதி ஜனாதிபதியாக ஆர்தர்மாஸ்  அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள வளமான பகுதிகளில் ஒன்றுதான் இந்த கடலோனியா பகுதி. இந்த பகுதி ஸ்பெயினில் இருந்து பிரிந்தால், ஸ்பெயினுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ள இந்த பகுதியில்தான் ஸ்பெயினின் 2வது பரபரப்புமிக்க விமான நிலையம் உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply